08 May 2020

நன்றி கொரோனா /Thanks Corona!

புவி மனிதர்கள் வாழ்வதற்கு மட்டும் இல்லை என்பதை COVID-19 நோய் தொற்று உணர்த்தியுள்ளது. எண்ணற்ற மரங்கள், செடிகள், புற்கள் போன்ற தாவரங்களும், கடல்வாழ் உயிரினங்களும், புழு, பூச்சிகள் போன்ற ஊர்வனங்களும், பல வகையான விலங்கினங்களும், வண்ண வண்ண பறவைகளும் இந்த அகன்ற பூமியில் வாழ்ந்து, மகிழ்ந்து வருகின்றன.
தொழில்நுட்ப முன்னேற்றம், வளர்ச்சி என்னும் போர்வையில் நிலம், நீர், காற்று போன்றவற்றை அசுத்தம் செய்து வான்படலத்தை துளையிட்டு, வெப்பநிலையை உயரச்செய்து அழகிய இயற்கையை மெல்ல மெல்ல அழித்து வருகிறோம்.
கொரோனா நோய் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அடங்கி வாழ்வதால் இயற்கை தனது தலையை உயர்த்தியுள்ளது. நீர்நிலைகள் விண்வெளியை பிரதிபலிக்கின்றன, மண்ணின் வளமை செழிக்கின்றன, காற்று தென்றலாக வீசுகிறது, வான் துளை மறைந்து உலகம் குளிர்ந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் கொரோனா நோய் தொற்றே! நன்றி கொரோனா!!
இதனை முன்னுதாரணமாக கொண்டு இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயல்படுவதை அறவே தவிர்த்து, எதிர்காலம் சிறக்க இயற்கையை பாதுகாப்போம்!!!

12 April 2020

Rajasthan Wind pattern abnormal



A Fresh Western Disturbance (WD) and Anti Cyclonic circulation (AC) over the Central Arabian Sea are likely to affect the Rajasthan wind pattern from 13th & 14th Apr ’20.

11 March 2020

பூமி (அ) புவி சுருக்கமாக ஒரு பார்வை Earth-brief Overview

புவி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் எனவும் குறிப்பிடுகின்றனர்.
மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது, மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அதுமுதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின. ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதற்கு வழி ஏற்பட்டது. இக்காலகட்டங்களில் புவியின் பௌதிகத் தன்மையினாலும் புவி சூரியனைச் சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. உயிர்களுக்கு ஏதுவான தற்போதுள்ள சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வுத் தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது.
புவி, ஞாயிறு மற்றும் நிலா உட்பட பரவெளியில், உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனையும் சுற்றி வருகின்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.24 சூரிய நாட்களுக்குச் (solar day) சமம். புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து, 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒரு வெப்ப ஆண்டுக்குத் (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைக்கோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனைச் சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்சியையும் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் (Late Heavy Bombardment) நடந்த வேளையில் பெரு விண்கற்களின் (asteroid) தாக்கம் புவியின் சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது.
நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்க முலகம்.
நிலம், நெருப்பு, நீர், காற்று மற்றும் வானம் ஆகியவற்றின் கலவையே பூமி என்று, பூமியை பற்றி 4000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தொல்காப்பியதில் விவரித்துள்ளார்.