நெதர்லாந்து நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இங்குள்ள
'லைடன்' (Leidan) நகரில் காற்றாலைகளுக்கான அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
'டெ வாக்' (De Valk) என்ற இந்தப் பழமையான காற்றாலை, 1883இல்
அமைக்கப்பட்டது. மாவு உற்பத்தித் தொழிற்சாலைக்காக உருவாக்கப்பட்ட இது,
1965இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. ஆறு தளங்களில் அமைக்கப்பட்டுள்ள
அருங்காட்சியகத்தில், காற்றாலையைப் பயன்படுத்தி மாவு அரைக்கப் பயன்பட்ட கல்
இயந்திரங்கள், கருவிகள், புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆறாவது தளத்தைக் கடந்து சென்றால் காற்றாலை உச்சியில் உள்ள இறக்கைகளின்
முழுப் பரிமாணத்தையும் பார்க்கலாம்.
அருங்காட்சியகத்தின் வலைத்தளம்: https://www.molendevalk.nl