“வைகாசி மாதம் மதி பிறந்த நாலாங்கலன்று
பெய்யப் பெருமழை பெய்யாவிடில்
யாரையும் கலப்பையையும் ஏறபுலச் செருவி
ஏரிக்குளமெல்லாம் வெட்டி எள்ளு விதைக்கணும்”
'நெல்லுக்கு பிறகு எள்' என்பது விவசாயப் பழமொழி. நெல்லை அறுவடை செய்த வயலில் எள்ளை விதைப்பர். இதனால் தை எள் தரையிலே; வைகாசி எள் வாயிலே என்ற பழமொழி வந்தது.வைகாசி மாதம் தான் எள்ளை அறுவடை செய்வர்.
மாங்காய், மாசியில் வடுவாக இருக்கும். பங்குனியில் பருத்து, வைகாசியில் தான் பழமாக மாறும். எனவே தான் குழந்தைக்கான தாலாட்டுப் பாடலில் 'மாசி வடுவே; வைகாசி மாம்பழமே' எனும் வரிகள் உள்ளன.
வைகாசி விஷாகத்தன்று முருகனுக்கு பாலாபிஷேகம் ஆனதும் வெயிலின் கடுமை குறைந்துவிடும் என்பது தமிழர்களின் வைகாசி நம்பிக்கை.