1.துருவ
கிழக்கு காற்று
வறண்ட மற்றும் ஈரப்பதமுள்ள துருவ கிழக்கு
காற்று, வட துருவ உயர் அழுத்த பகுதியிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த பகுதிக்கு வீசுகிறது.
அதாவது 60° அட்சரேகைக்கு மேற்பட்ட பகுதிகளில் பாய்கிறது. இவை நார்வே, அலாஸ்கா, அமெரிக்கா
போன்ற நாடுகளை உள்ளடக்கியது . முன் துருவ
(Polar Front) பகுதி என்பது துருவ கிழக்கு காற்று பகுதிக்கும், மேற்கு காற்று பகுதிக்கும்
இடைப்பட்ட பகுதியாகும்.
2.
மேற்கு காற்று (அ) எதிர் வாணிப காற்று
மேற்கு
பகுதியிலிருந்து கிழக்கு பகுதிக்கு பாயும் காற்றின் பெயர் மேற்கு காற்று என்றழைக்கப்படுகின்றது.
இதன் எல்லை கோடு அதாவது அட்சரேகை 30° முதல் 60° க்கு இடைப்பட்ட பகுதியாகும். 30° யை
ஒட்டியுள்ள பகுதி அதாவது எதிர் வாணிப காற்று பகுதியையும், வாணிப காற்று பகுதியையும்
இணைக்கும் பகுதி குதிரை அட்சரேகை எனப்படும். இப்பகுதியில் மாறுபட்ட காற்றின் வேகமும்,
சில நேரங்கள் வறண்ட சூறை காற்றும், உயரழுத்தமும்
கொண்ட ஒரு பாலைவன பரப்பாகும். மேற்கு காற்று குளிர்கால அரைக்கோளத்தில் அதிகமாகவும்,
கோடைகால அரைக்கோளத்தில் குறைவாகவும் வீசுகிறது. வட அரைக்கோளத்தில் அமெரிக்கா புளோரிடா,
மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் இதன் எல்லைகளாக அமைகின்றன.
தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, பராகுவே போன்ற பாலைவனங்கள் இதன்
எல்லைகளாக அமைகின்றன.
3.வாணிப
காற்று (Trade Wind)
வாணிப
காற்று என்பது துணை வெப்பமண்டல உயிர் அழுத்தப்பகுதியிலிருந்து தாழ்வழுத்த பகுதிக்கு
பாய்கிறது. வட அரைக்கோள பகுதி அதாவது 30° வ
அட்சரேகையிலுருந்து 0° புவி நடுக்கோடு பகுதியை நோக்கி பாய்கிறது இவையே வடகிழக்கு
வாணிப காற்று அல்லது வழகிழக்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகிறது. இதேபோல் தென் அரைக்கோள
பகுதி அதாவது 30° தெ அட்சரேகையிலுருந்து 0° புவி நடுக்கோடு பகுதியை நோக்கி பாயும் காற்று
தென்மேற்கு வாணிப காற்று அல்லது தென்மேற்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகிறது. பொதுவாக
துணை வெப்பமண்டல பகுதிகளில் காலநிலை சீராக காணப்படுகிறது.