08 May 2020

நன்றி கொரோனா /Thanks Corona!

புவி மனிதர்கள் வாழ்வதற்கு மட்டும் இல்லை என்பதை COVID-19 நோய் தொற்று உணர்த்தியுள்ளது. எண்ணற்ற மரங்கள், செடிகள், புற்கள் போன்ற தாவரங்களும், கடல்வாழ் உயிரினங்களும், புழு, பூச்சிகள் போன்ற ஊர்வனங்களும், பல வகையான விலங்கினங்களும், வண்ண வண்ண பறவைகளும் இந்த அகன்ற பூமியில் வாழ்ந்து, மகிழ்ந்து வருகின்றன.
தொழில்நுட்ப முன்னேற்றம், வளர்ச்சி என்னும் போர்வையில் நிலம், நீர், காற்று போன்றவற்றை அசுத்தம் செய்து வான்படலத்தை துளையிட்டு, வெப்பநிலையை உயரச்செய்து அழகிய இயற்கையை மெல்ல மெல்ல அழித்து வருகிறோம்.
கொரோனா நோய் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அடங்கி வாழ்வதால் இயற்கை தனது தலையை உயர்த்தியுள்ளது. நீர்நிலைகள் விண்வெளியை பிரதிபலிக்கின்றன, மண்ணின் வளமை செழிக்கின்றன, காற்று தென்றலாக வீசுகிறது, வான் துளை மறைந்து உலகம் குளிர்ந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் கொரோனா நோய் தொற்றே! நன்றி கொரோனா!!
இதனை முன்னுதாரணமாக கொண்டு இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயல்படுவதை அறவே தவிர்த்து, எதிர்காலம் சிறக்க இயற்கையை பாதுகாப்போம்!!!