காற்று முன்னறிவிப்பு இந்திய பெருங்கடலில் ஆங்காங்கே நிலவும் குறைந்த காற்றழுத்த நிலையின் காரணமாக வடகிழக்கு பருவ காற்று எளிதாக முன்னோக்கி வருகிறது. இதனால் நாளை (21-11-2017) முதல் ஒரு வாரத்திற்கு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் சற்று கூட வாய்ப்புள்ளது. மேலும் ராதாபுரம், உதயத்தூர், கூடங்குளம், திசையன்விளை மற்றும் சங்கனேரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கலாம்.