17 January 2018
10 January 2018
Troposphere-அடிவளிமண்டலம்
அடிவளிமண்டலம்
அடிவளிமண்டலம் (Troposphere) என்பது
புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத்
திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள்
ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில்
வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின்
சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப்
பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது.
துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன்
தடிப்பு மழை காலங்களில் தெளிவற்றதாக உள்ளது. புவிமேற்பரப்புடன் உள்ள உராய்வினால்
காற்றோட்டத்தில் தாக்கத்தை விளைவிக்கும் அடிவளிமண்டலத்தின் கீழ்ப்பகுதி கோள்சார்
எல்லைப் படலம் (planetary boundary layer) எனப்படும்.
அழுத்தம் மற்றும் வெப்பநிலையின்
அமைப்பு
அடிவளிமண்டலத்தின் வேதியியல் அமைப்பு சீரானது. எனினும்
நீராவியின் பரவல் சீராகக் காணப்படுவதில்லை. ஆவியாதல் மூலம் நீராவி
உருவாதல் மேற்பரப்பிலேயே நடைபெறுகிறது. அத்துடன், உயரம் கூடும்போது அடிவளிமண்டலத்தில்
வெப்பநிலை குறைந்து செல்வதுடன், வெப்பநிலை குறையும்போது ஆவியமுக்கமும் குறைகிறது. இதனால்
வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய நீராவியின் அளவு, உயரம் கூடும்போது குறைந்து செல்கிறது.
ஆகவே நில மேற்பரப்புக்கு அருகில் கூடிய நீராவி காணப்படுகின்றது.
அழுத்தம்
வளிமண்டலத்தின்
அழுத்தம் கடல் மட்டத்திலேயே கூடுதலாக இருக்கும். உயரத்துடன் வளியமுக்கமும்
குறைகிறது. வளிமண்டலம் ஏறத்தாழ நீர்நிலையியல் சமநிலையில் உள்ளதனால், ஒரு
குறிப்பிட்ட புள்ளியில் உள்ள அழுத்தம் அதன் மேலிருக்கும் வளியின் நிறைக்குச் சமமாக
இருப்பதனாலேயே உயரம் கூடும்போது அமுக்கமும் குறைகிறது.
o அடிவளிமண்டலத்தின் உயரம் 6-20 Km
o
வெப்பநிலை +17 °C to -51°C
o அழுத்தம் 1000 Hpa
02 January 2018
புயலுக்கான பெயர்க் காரணம் தெரியுமா? You know about Cyclone name?
காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களில் புயல் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் டர்னடோ, என்றும் மேற்கிந்திய தீவுகளில் ஹரிகேன் சூறாவளி என்றும் சீனாவில் கடற்கரைப் பகுதிகளில் டைபூன் எனவும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் புயல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சைக்ளோன் (cyclone) என்று அழைக்கப்படுகிறது. பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் சுழன்று அடிக்கும் காற்றும், இயற்கைச் சீற்றத்திலும் மாற்றம் இருப்பதில்லை.
ஒவ்வொரு நாடுகளிலும் புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் பிற்காலத்தில் அவற்றை கடல் மாலுமிகள் முதல் வானிலை ஆய்வாளர்கள் வரை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவது அவசியம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. புயலால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், அதைப் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகளை தருவதற்கு அதனை ஒரு பெயர் சூட்டி அழைப்பதால் சுலபமாக குறிப்பிட முடிகிறது. பேரிடர் மேலாண்மை,புயல் பாதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குப் இத்தகைய பெயர்கள் உதவும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.
புயல் வேகத்தை எச்சரிக்க ஆபத்து எண்கள் அறிவிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது. பெயர்களைப் பொறுத்தவரையில் அவை சுருக்கமாகவும் நினைவில் வைத்துக் கொள்ள வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி.
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் பழக்கம் 2000-ம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் சுழற்சி முறையில் புயல்களுக்கு பெயர்களை வழங்கி வருகின்றன. கடந்த முறை வங்கதேசத்தை புரட்டி எடுத்த புயலுக்கு தாய்லாந்து மோரா என்று பெயரிட்டது. அடுத்ததாக அந்த மண்டலத்தில் உருவாகும் புயலுக்கு பெயர் சூட்டும் உரிமையை வங்கதேசம் பெற்றது. புதிதாக உருவாகும் புயலுக்கு ‘ஒக்கி’ என பெயர் சூட்டுவதாக வங்கதேசம் அப்போதே அறிவித்திருந்தது. அவ்வாறே கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் தற்போதைய இந்தப் புயலுக்கு வங்கதேசம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஓகி என்றே வழங்கப்படுகிறது. வங்காள மொழியில் ‘ஒக்கி’ என்றால் கண் என்று அர்த்தமாம்.
இந்தப் புயல் பெயர் வரிசையில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர். இனி வரவிருக்கும் புயல்களுக்கான இந்தியா வழங்கவிருக்கும் பெயர்கள் சாகர், மேக், வாயு என்பவை ஆகும். அடுத்த புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர் ‘சாகர்’ இந்தியில் 'சாகர்' என்றால் கடல் என்று அர்த்தம்.
Subscribe to:
Posts (Atom)