கங்கண கிரகணம் or வளைய சூரிய கிரகணம்
அறிவியல்
வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப
முன்னேற்றங்கள் மூலம் வானில் உள்ள அனைத்து அமைப்புகளும்
ஒன்றை மையமாக வைத்து சுற்றி வருகின்றன.
நிலா,
பூமியை மாதத்திற்கு ஒரு முறையும், பூமி சூரியனை வருடத்திற்கு ஒரு முறையும் சுற்றி
வருகின்றன என்பது நாம் அறிந்ததே.
அதேபோல்
சூரியன்- நிலவு, கிரகங்கள், வால்நட்சத்திரங்கள், மேகக்கூட்டங்கள் மற்றும் சூரியனை சார்ந்த அனைத்து அமைப்புகளையும்
பால்வளி
அண்டத்தை மையமாக கொண்டு நொடிக்கு 275 கிமீ வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியன் ஒருமுறை பால்வளியை
சுற்றிவர 22 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
இதில்
சூரிய கிரகணம் என்பது ஒரு அரிய நிகழ்வு.
சூரியனுக்கும்
பூமிக்கும் இடையில் நிலா வருவதால், நிலவின் நிழல் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில்
விழுகிறது. சூரிய கிரகணம் அமாவாசை நாளில் மட்டுமே நிகழும்.
நிலவு,
பூமி மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் ஆண்டுக்கு 12 முதல் 13 முறை வந்த போதிலும்,
சூரிய கிரகணம் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைக்கலாம், ஆனால் பூமி, நிலவு சுற்று
வட்டப்பாதை 5° வேறுபாடு கொண்டது, அதனால் மூன்றும் ஓரிடத்தில் ஒரே நேர்கோட்டில் வர அதிக
காலம் எடுத்துக்கொள்கிறது.
வகைகள்
1.முழுமையான சூரிய கிரகணம்
2.வளைய சூரிய கிரகணம்
3.கலப்பு சூரிய கிரகணம் (அரிய நிகழ்வு)
4.பகுதி சூரிய கிரகணம்
என
நான்கு வகைப்படும்.
1.வளைய
சூரிய கிரகணம்
நாளை டிசம்பர்-2019 26ந் தேதி காலை நடைபெறவிருக்கும்
இந்த நிகழ்வு நூற்றாண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் ஆகும்.
காலை
6:40:07 மணியளவில் சவூதி அரேபியா நாட்டின் பல பகுதிகளில் தென்படும் கிரகணம். படிப்படியாக
நகர்ந்து இந்தியாவில் மங்களூரு- மலப்புரம் இடையே சரியாக 8:04:22 மணியளவில் நுழைந்து
தமிழகத்தின் நீலகிரி, கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி,
மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் வழியாக 08:08:44 மணியளவில் ஆக்கிரமிக்கிறது.
கோயம்புத்தூரை
பொறுத்தவரையில் 8:06:15 மணிக்கு தொடங்கி, 9:27:52 மணி முதல் 9:30:55 மணிக்குள் முழு
சூரிய கிரகத்தை கடந்து 11:10:54 மணிக்கு நிறைவடைகிறது.
இறுதியாக சூரிய கிரகணமானது மாலை
5:54:31 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் நிறைவடைந்து, மாலை 5:57:06 மணிக்கு சூரியன் மறைந்துவிடுகிறது.
கடந்த
நூற்றாண்டில் முதல் வருடம் அதாவது 118 ஆண்டுகளுக்கு முன்பு 1901-ம் ஆண்டு நவம்பர்
11ந் தேதி இது போன்ற நிகழ்வு கிட்டத்தட்ட 95% ஒத்துபோகக்கூடிய நிகழ்வு நடந்துள்ளது.
அடுத்த
நூற்றாண்டில் அதாவது 94 ஆண்டுகளுக்கு பின்பு 2113-ம் ஆண்டு டிசம்பர் 8ந் தேதி இது போன்ற
நிகழ்வு கிட்டத்தட்ட 80% ஒத்துபோகக்கூடிய நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது.
மேலும்
தமிழகத்தில் வளைய சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 21ந் தேதி தென்படும்.
பாதிப்புகள்:
இந்த
நிகழ்வின் போது அதிக அளவில் புறஊதா கதிர்கள் வெளிப்படுவதால் தலைவலி, மனஅழுத்தம், கண்நோய்கள்
வர வாய்ப்புள்ளது.
இந்த
கதிர்வீச்சு வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை பாதிக்க வாய்ப்புள்ளது.
காற்றில்
பல்வேறு நுண்ணுயிர்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கைகள்:
கிரகணத்தின்
பொது பறவைகள், விலங்குகள் அதனை முன்கூட்டியே உணர்ந்து வெளிய வருவதில்லை, ஆகவே மனிதர்களும்
தங்களை காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் வேண்டும்.
கிரகணத்தை
நேரடியாக பார்க்கக்கூடாது. தகுந்த தரமான கண்ணாடிகளை பயன்படுத்தி மட்டுமே பார்க்கவும்.
தண்ணீர்,
உணவு பொருட்களை மூடி வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் தண்ணீர் குடிக்க நேர்ந்தால்,
நாணல் புல் (அ) அருகம்புல் தண்ணீரினுள் போட்டு குடித்தால் நல்லது. நாணல் புல்லுக்கு
கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என்பது வரலாறு.
கிரகணம்
முடிந்தவுடன் குளித்தால் நல்லது, குறிப்பாக கடல் நீரிலோ அல்லது நீரில் சிறிது கல் உப்பு
கலந்து குளித்தால் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
கனமான
பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
பிரபு
சிவராஜ்
வானிலை
ஆராய்ச்சி
கோயம்புத்தூர்