09 January 2020

சந்திர கிரகணம் Lunar Eclipse 10-Jan-2020 22:30 to 11-Jan-2020 02:45 hrs.

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது. இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. எனவே ஒரு முழுநிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது. நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.
முழுமையான நிலவு மறைப்பின் போது, நிலவின் மீது விழும் கதிரவ ஒளியை புவி முற்றிலும் தடுக்கிறது. அப்போது, கதிரவ வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு புவியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படுகிறது. மேலும் புவியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு கதிரவ ஒளியை சிதறடிக்கிறது. இதனால் ராலே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிற ஒளியில் தோற்றமளிக்கும். எனவே இது குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகிறது.
உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய கதிரவ மறைப்பு போலல்லாமல், புவியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் நிலவு மறைப்பைக் காண முடியும். சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் முழு கதிரவ மறைப்பைப் போலில்லாமல் நிலவு மறைப்பு சில மணிநேரங்கள் வரை நீடிக்கும். மேலும் கதிரவ மறைப்பு போலில்லாமல் நிலவு மறைப்பை எந்தவொரு பாதுகாப்புக் கருவிகளும் இன்றி வெறும் கண்களால் காண இயலும்.

04 January 2020

North-East monsoon Rainfall in Tamilnadu -வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதுமான அளவு பெய்துள்ளது.
உங்கள் மாவட்டத்தின் மழை பொழிவை அறிந்துகொள்ள கீழேயுள்ள வரைபடத்தை பார்க்க.
North-East monsoon has caused considerable rainfall in most parts of Tamil Nadu.
See the map below to find out the rainfall for your district.