13 November 2017

காற்று முன்னறிவிப்பு Wind Forecast 13-11-2017 21:00 Hrs.



காற்று முன்னறிவிப்பு 13-11-2017 21:00 Hrs.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையானது அரபி கடல் பகுதியிலுள்ள காற்றை இழுபதினால் காற்றானது நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பாலக்காடு, கம்பம், செங்கோட்டை மற்றும் ஆரல்வாய்மொழி  கணவாய்களின் தென்மேற்கு திசையில் வழியே நுழைகிறது. இதனால் நாளை மதியம் முதல்  8 m/s முதல் 10m/s  வரை காற்று வீசக்கூடும், ஒருசில சமயங்களில் காற்று வீச்சு இருக்கலாம். இதனால் காற்றாலை மின் உற்பத்தி சற்று கூடுதலாக கிடைக்க ஏதுவான சூழல் நிலவுகிறது. மழையை பொருத்தவரையில் நாளை முதல்  கடலோர மாவட்டங்களில் அதிகமாகவும், 15-11-2017 மதியம் முதல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மிதமான மழை பொழிவையும் எதிர்பார்க்கலாம். மாலை நேரங்களில் மிக குறைந்த அளவு பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.



No comments:

Post a Comment