முச்சிறை மாதிரிகள் (Tri Cellular
Model):
கோள்காற்றை போலார் சிறை, பெர்ரல்
சிறை மற்றும் ஹாட்லி சிறை என்று மூன்று சிறை மாதிரிகளாக வகை படுத்தப்படுகின்றன. இந்த
மாதிரிகள் கோள்காற்றின் வகைகள், அதன் சுற்றோட்டம், காலங்கள் ஆகியவற்றை தெளிவாக விளக்குகின்றன.
1.போலார் சிறை (Polar Cell):
வடதுருவ பகுதியில் வளியானது
உயர் அழுத்த பகுதியிலிருந்து, தாழ்வழுத்த பகுதிக்கு பாய்கிறது. அதாவது பூமியின் மைய
பகுதி 0°வ லிருந்து 60°வ இடைப்பட்ட பரப்பில் பாய்கிறது.
காற்றின் திசை கோலாரியோசிஸ் விளைவின் காரணமாக
வட துருவ பகுதியிலிருந்து வலப்புறமாக திசை மாறுகிறது. இந்த சிறை துருவ கிழக்கு காற்றை
பற்றி விவரிக்கிறது.
2.பெர்ரல் சிறை (Ferral Cell):
30°வ முதல் 60°வ வரைக்கும் இடைப்பட்ட அட்ச ரேகை பரப்பை
இந்த சிறை விளக்குகிறது.
இப்பகுதியில் வளியானது துருவ பகுதியை நோக்கி
இழுக்கப்படுகிறது. கோலாரியோசிஸ் விளைவின் காரணமாக காற்றின் திசை தென்மேற்காக மாறுகிறது.
இக்காற்று பெருங்கடலிலுள்ள ஈரப்பத காற்றை
நிலப்பரப்பினுள் இழுத்து வருகிறது. வெப்பமண்டல பகுதியிலுள்ள சூடான காற்று குறைந்த அடர்த்தியையே
கொண்டுள்ளதால் தாழ்வழுத்த பகுதியை உருவாக்குகிறது. இந்த தாழ்வழுத்த பகுதியே வலுப்பெற்று
புயலாக மாறுகிறது. மத்திய அட்ச ரேகை பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தாழ்வழுத்த பகுதிகள் நிலையில்லமால் ஏற்படுகின்றன இதையே மித வெப்பநிலை
கடல்சார் காலநிலை (Cool Temperature Western Maritime Climate - CTWM) என்றழைக்கப்படுகின்றன.
3.ஹாட்லி சிறை (Hardly Cell):
30°வ முதல் 30°தெ அரைக்கோளத்தின்
காற்றோட்டத்தை இந்த சிறை விவரிக்கிறது. கதிரவனின்
கதிர்கள் செங்குத்தாக வெப்பமண்டல பகுதி 30°வ-க்கும் 30°தெ-க்கும் மைய பகுதியில் விழுகின்றன.
இப்பகுதியை வெளி வெப்பமண்டல கூடும் பகுதி (Inter tropical convergence Zone - ITCZ) என்று
அழைக்கப்படுகின்றன.
சூரிய கதிர்கள் நேரடியாக இங்கு
விழுவதால் சூடான வளி மேலெழும்புகிறது இதுவே மைய பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தாழ்வழுத்த
பகுதி உருவாக காரணமாக அமைகிறது. மேலெழும்பும் காற்று குளிர்ந்து பெரும் மேக திரள்களாக
உருவாகி பெரும்மழையை பெய்விக்கிறது. வெப்பமண்டல பகுதியில் பாயும் கிழக்கு காற்று கோலாரியோசிஸ்
விளைவின் காரணமாக திசைமறி வீசுகிறது. அதாவது
வடகிழக்கு காற்று வலப்புறமாகவும், தென்மேற்கு காற்று இடப்புறமாகவும் மாறுகிறது.
No comments:
Post a Comment