வானிலை கூற்றுகளின்படி அடி வளிமண்டல காற்றை
அதன் வேறுபட்ட வேகத்தையும், திசையையும் வைத்து வரையறுக்கப்பகிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில்
இயல்பைவிட அதிகமாக, கணநேரத்தில் வீசும் காற்று, காற்று வீச்சு (Gust) என்றழைக்கப்படுகிறது.
இந்த காற்று வீச்சு வானிலையில் அவ்வவ்போது நிகழும் மேக ஓட்டம், மழை பொழிவு, நிலப்பரப்பின்
வெப்பநிலை, நிலஅமைப்பு மற்றும் கட்டிடங்கள் போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிகவும் அதிவேகத்தில்
குறுகிய நேரம் மட்டுமே வீசி மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் காற்று மாயக்காற்று
(Squall) எனவும் அழைக்கப்படுகின்றன.
பூமியின்
காற்றோட்டம் மிகவும் முக்கியமான இரு காரணங்களால் ஏற்படுகின்றன. அவை
1.புவி சுழற்சி
2.நில அமைப்பின் வெப்பநிலை
வேறுபாடு
உலக
காற்றின் அமைப்பு (Global wind Pattern).
புவியின் காற்றின் அமைப்பை வைத்து கீழ்கண்ட
ஆறு காற்று வளையங்களாக பிரிக்கலாம். புவி மைய பகுதியிலிருந்து வட அரைக்கோளத்தில் மூன்று
பிரிவுகளாகவும், தென் அரைக்கோளத்தில் மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.
அவையாவன.
1.துருவ கிழக்கு காற்று (Polar
Easterlies)
2.மேற்கு காற்று (Westerlies)
3.வாணிப காற்று (Trade Wind)
No comments:
Post a Comment