19 May 2018

வைகாசி மாதப் பழமொழிகள் மற்றும் சிறப்புகள்



“வைகாசி மாதம் மதி பிறந்த நாலாங்கலன்று

பெய்யப் பெருமழை பெய்யாவிடில்

யாரையும் கலப்பையையும் ஏறபுலச் செருவி

ஏரிக்குளமெல்லாம் வெட்டி எள்ளு விதைக்கணும்”


'நெல்லுக்கு பிறகு எள்' என்பது விவசாயப் பழமொழி. நெல்லை அறுவடை செய்த வயலில் எள்ளை விதைப்பர். இதனால் தை எள் தரையிலே; வைகாசி எள் வாயிலே என்ற பழமொழி வந்தது.வைகாசி மாதம் தான் எள்ளை அறுவடை செய்வர்.

மாங்காய், மாசியில் வடுவாக இருக்கும். பங்குனியில் பருத்து, வைகாசியில் தான் பழமாக மாறும். எனவே தான் குழந்தைக்கான தாலாட்டுப் பாடலில் 'மாசி வடுவே; வைகாசி மாம்பழமே' எனும் வரிகள் உள்ளன.

வைகாசி விஷாகத்தன்று முருகனுக்கு பாலாபிஷேகம் ஆனதும் வெயிலின் கடுமை குறைந்துவிடும் என்பது தமிழர்களின் வைகாசி நம்பிக்கை.

18 May 2018

தென்மேற்கு பருவகாலம் - South West Monsoon


உலகிலேயே இந்திய துணை கண்டத்திற்கு இயற்கையாகவே அமைந்த மிக பெரும் கொடை தென்மேற்கு பருவகாலம் இப்பெருங் கொடையை வரவேற்கும் விதமாக

தென்மலையை தென்றல் தழுவ,

கல்லும், மண்ணும் கரைந்து ஓட,

புல்லும், செடியும் பூத்து குலுங்க,

கொடியும், மரமும் பின்னி படர,

மானும், மயிலும் மகிழ்ந்து ஆட,

குயில் கூவ, வானம்பாடி ஆட,

கழுகும், நாரையும் காத்து கிடக்க,

மீனும், நண்டும் கண்சிமிட்ட,

வளைந்து கிடக்கும் வானவில்லை நீர்த்துளிகள் சூழ,
வாண்டுகள் துள்ளி விளையாட,


வயலும், வாழ்வும் பொழிவு பெற,

வானம் மிளிர, பூமி அதிர வா! வா!! வா!!!

மண் சிறப்புற வா! வா!! வா!!!

என் மனம் உயிர்பெற வா! வா!! வா!!!

                                                            -பிரபு சிவராஜ்

என்று உலகிலுள்ள எல்லா உயிர்களும் ஆனந்த புன்னகையுடன் வரவேற்கின்றன.