உலகிலேயே
இந்திய துணை கண்டத்திற்கு இயற்கையாகவே அமைந்த மிக பெரும் கொடை தென்மேற்கு பருவகாலம்
இப்பெருங் கொடையை வரவேற்கும் விதமாக
தென்மலையை தென்றல் தழுவ,
கல்லும்,
மண்ணும் கரைந்து ஓட,
புல்லும்,
செடியும் பூத்து குலுங்க,
கொடியும்,
மரமும் பின்னி படர,
மானும்,
மயிலும் மகிழ்ந்து ஆட,
குயில்
கூவ, வானம்பாடி ஆட,
கழுகும்,
நாரையும் காத்து கிடக்க,
மீனும்,
நண்டும் கண்சிமிட்ட,
வளைந்து கிடக்கும் வானவில்லை நீர்த்துளிகள் சூழ,
வாண்டுகள் துள்ளி விளையாட,
வாண்டுகள் துள்ளி விளையாட,
வயலும், வாழ்வும் பொழிவு பெற,
வானம் மிளிர, பூமி அதிர வா! வா!! வா!!!
மண்
சிறப்புற வா! வா!! வா!!!
என்
மனம் உயிர்பெற வா! வா!! வா!!!
-பிரபு
சிவராஜ்
என்று
உலகிலுள்ள எல்லா உயிர்களும் ஆனந்த புன்னகையுடன் வரவேற்கின்றன.
No comments:
Post a Comment