மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நிலவி வரும் உயரழுத்தம் காரணமாக வரும் 21
ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழக கணவாய் பகுதிகளில் காற்றின் வேகம்
பாதிக்க கூடும். கடந்த தென்மேற்கு பருவ காற்று துவங்கியது முதல் சரமாரியாக
வீசிய காற்று சற்று ஓய்வெடுக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் காற்றாலை
மின்னுற்பத்தி கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது. இந்த வருடம் ஏப்ரல் 01
முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5789 மில்லியன் யூனிட்
மின்னுற்பத்தி செய்துள்ளது. இதன் மூலமாக 926.3 மட் அளவுக்கு சுற்று சூழலை
மாசுபடுத்தும் கார்பனை கட்டு படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment