28 November 2019

Wind & Rain Forecast|காற்று & மழை கணிப்பு: 28-Nov-2019 12:00 Hrs.



காற்று & மழை கணிப்பு: 28-Nov-2019 12:00 Hrs.
தமிழகத்தில் நவம்பர் மாத இறுதியில் லேசான பனிப்பொழிவு துவங்குவது இயல்பான தருணம், இதற்கு இணையாக வங்காள விரிகுடா மற்றும் அரபி கடலில் காற்றழுத்த  தாழ்வு பகுதிகள் தோன்றுவதும் இயல்பான ஒன்றுதான்.
வடகிழக்கு பருவத்தில் அக்டோபர் மாதம் மட்டும் 27% கூடுதலான மழை பொழிந்துள்ளது. மாலத்தீவு-சோமாலியாவிற்கு இடைப்பட்ட கடல்பகுதியில் காற்றழுத்த  தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இந்த நவம்பர் மாதத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு  பெரும்பாலான பகுதிகள் மழை பரவலாக பெய்துவருகிறது.  மேலும் இது புயலாக மறவாய்ப்புள்ளது. வரும் 30 ஆம் தேதிக்கு மேல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பொழியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவக்காற்று  கூடுதல் பலத்துடன் வீசுகிறது, இதே வேகம் வரும் 6ஆம் தேதி வரை நிலவும், இலங்கையை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாவதால் காற்றின் திசையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வேகம் தடைபடும் சூழல் நிலவுகிறது. பாலக்காடு, கம்பம் மற்றும் செங்கோட்டை கணவாய்களில் 5m/s க்கு குறைவாகவே வீசும்.

No comments:

Post a Comment