27 December 2017

Invest in Meteorology- புயல்கள் உருவாகும் முன்பு இன்வெஸ்ட் என்று பெயரிடுகின்றனர், அது ஏன் என்று தெரியுமா?





கடல் பகுதியில் புயல்கள் உருவாவதற்கு முன்பு வானிலை ஆய்வு மையம் மூலமாக இன்வெஸ்ட் என்னும் பெயர் சூட்டுவது வழக்கம். இன்வெஸ்ட் என்பது இன்வெஸ்டிகஷன் (Investigation) அதாவது கண்காணிப்பு என்பதாகும்.
இன்வெஸ்ட் என்ற பெயர் உலக வானிலை மையத்தினால் உருவாக்கப்பட்ட பெயராகும். இவை புயல்கள் உருவாகும் இடங்களை கணித்து, புயல்கள் உருவாக ஏதுவான சூழல் நிலவினால் அதற்கேற்ப அந்த இடத்தின் அட்சரேகை மற்றும் உருவாகும் கடற்பரப்பு ஆகியவை சேர்த்து பெயரிடப்படுகிறது.
எடுத்துக்காட்டாக 91பி இன்வெஸ்ட் என்றால் 91 அட்சரேகையில், வங்காள விரிகுடா கடலில் உருவாவதை குறிக்கிறது. மேலும் ஒவ்வொரு கடல் பகுதிக்கும் ஒவ்வொரு எழுத்து கொண்டு குறிப்பிடப்படுகிறது. அவற்றை கீழ்கண்ட வரிசையில் காண்போம்.
அட்சரேகை 80 முதல் 89 வரை சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

A - Arabian Sea (Region V - New Delhi forecast centre)
B - Bay of Bengal, Andaman Sea and Vicinity (Region V - New Delhi forecast centre)
C - Central North Pacific Ocean (Region III - Honolulu forecast centre)
E - Eastern North Pacific Ocean (Region II- Miami forecast centre)
F - South Pacific Ocean east of 135°E to 120°W north of 25°S (Region XII - Fiji forecast centre)
G - Environs of Indonesia, North-East Indian Ocean (Region VIII - Jakarta forecast centre)
H - Solomon Sea, Gulf of Papua (Region X - Port Moresby forecast centre)
I - North Atlantic Ocean east of Prime Meridian
K - Black Sea
L - North Atlantic Ocean (Region I - Miami forecast centre)
M - Mediterranean Sea
N - North Atlantic Ocean north of 60°N
P - South Pacific Ocean east of 135°E to 120°W south of 25°S (Region XIII - Wellington forecast centre)
Q - Miscellaneous/Exceptional
R - South-West Indian Ocean (Region VI - Réunion forecast centre)
S - South-East Indian Ocean (Region VII - Perth forecast centre)
T - South Atlantic Ocean
U - South-West Pacific Ocean near Australia (Region XI - Brisbane forecast centre)
V - Gulf of Carpentaria, Arafura Sea (Region IX - Darwin forecast centre)
W - Western North Pacific Ocean (Region IV - Tokyo forecast centre)
X - South-East Pacific Ocean

08 December 2017

புயல் முன்னறிவிப்பு (Cyclone Forecast) 08-12-2017

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வழுப்பெற்று தாழ்வுமண்டலமாக மாறி வடக்கு வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி பயணிக்கிறது. அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் புயலாக மாற வாய்ப்புள்ளது.



30 November 2017

Invest 91B changed to 03B Tropical Storm

03B Tropical Storm traking for next 5 days, which might be intensifying cyclone.



28 November 2017

Current position of Indian ocean low depression-இந்திய பெருங்கடலின் காற்றுழத்த தாழ்வுநிலை



Invest 91B என்ற காற்றழுத்த தாழ்வு நிலையானது இலங்கை - கொழும்பிலிருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் சுமார் 230 NM தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காற்றின் வேகம் 12.9 m/s முதல் 15.4 m/s என்ற அளவில் செங்குத்தாக சுழன்று கொண்டிருக்கிறது. மேலும் கடற்பரப்பின் வெப்பநிலை 27-28 °C என்ற அளவில் பதிவாகியுள்ளது.
உலக வானிலை மாதிரிகளின் கணிப்புப்படி வடகிழக்கு திசையில் நகருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடற்பரப்பின் அழுத்தம் 1006 Hpa என்ற அளவில் நிலவுவதால்  அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தென் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.




27 November 2017

வளிமண்டலம் (Atmosphere) ஒரு பார்வை

பூமியின் வளிமண்டலமானது வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இவை புவிஈர்ப்பு விசையினால் நிலைநிறுத்தபடுகின்றன. வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவீதமும், ஆக்ஸிஜன் 21 சதவீதமும், இதர வாயுக்களான ஆர்கான், நியான், ஹீலியம், க்ரிப்டோன், கார்பன் டை ஆக்சைடு, ஓசோன் போன்ற வாயுக்கள் 1 சதவீதமும் கலவையாக கலந்துள்ளன. மேலும் நீராவியும், தூசுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இவையே வானிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைகின்றன.
வளிமண்டலத்தின் உயரம் அதிகரிக்க வாயுவின் அளவானது வேறுபடுகிறது. அவை பூமியின் மேற்பரப்பில் அடர்த்தியாகவும்,உயரம் அதிகரிக்க, அதிகரிக்க அடர்த்தி குறைந்தும் காணப்படுகின்றன.
வளிமண்டலம் அதன் பண்புகளின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அவையாவன

           1.அடியடுக்கு
           2.படையடுக்கு
           3.மையஅடுக்கு
           4.அயனியடுக்கு
           5.வெளியடுக்கு