27 November 2017

வளிமண்டலம் (Atmosphere) ஒரு பார்வை

பூமியின் வளிமண்டலமானது வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இவை புவிஈர்ப்பு விசையினால் நிலைநிறுத்தபடுகின்றன. வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவீதமும், ஆக்ஸிஜன் 21 சதவீதமும், இதர வாயுக்களான ஆர்கான், நியான், ஹீலியம், க்ரிப்டோன், கார்பன் டை ஆக்சைடு, ஓசோன் போன்ற வாயுக்கள் 1 சதவீதமும் கலவையாக கலந்துள்ளன. மேலும் நீராவியும், தூசுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இவையே வானிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைகின்றன.
வளிமண்டலத்தின் உயரம் அதிகரிக்க வாயுவின் அளவானது வேறுபடுகிறது. அவை பூமியின் மேற்பரப்பில் அடர்த்தியாகவும்,உயரம் அதிகரிக்க, அதிகரிக்க அடர்த்தி குறைந்தும் காணப்படுகின்றன.
வளிமண்டலம் அதன் பண்புகளின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அவையாவன

           1.அடியடுக்கு
           2.படையடுக்கு
           3.மையஅடுக்கு
           4.அயனியடுக்கு
           5.வெளியடுக்கு


No comments:

Post a Comment