Invest
91B என்ற காற்றழுத்த தாழ்வு
நிலையானது இலங்கை - கொழும்பிலிருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் சுமார் 230 NM தொலைவில்
மையம் கொண்டுள்ளது.
காற்றின் வேகம் 12.9 m/s முதல் 15.4 m/s என்ற அளவில் செங்குத்தாக சுழன்று
கொண்டிருக்கிறது. மேலும் கடற்பரப்பின் வெப்பநிலை 27-28 °C என்ற அளவில் பதிவாகியுள்ளது.
உலக வானிலை மாதிரிகளின் கணிப்புப்படி
வடகிழக்கு திசையில் நகருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடற்பரப்பின் அழுத்தம் 1006
Hpa என்ற அளவில் நிலவுவதால் அடுத்த 24 மணி
நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தென் தமிழகத்தில்
காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment