30 November 2017

Invest 91B changed to 03B Tropical Storm

03B Tropical Storm traking for next 5 days, which might be intensifying cyclone.



28 November 2017

Current position of Indian ocean low depression-இந்திய பெருங்கடலின் காற்றுழத்த தாழ்வுநிலை



Invest 91B என்ற காற்றழுத்த தாழ்வு நிலையானது இலங்கை - கொழும்பிலிருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் சுமார் 230 NM தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காற்றின் வேகம் 12.9 m/s முதல் 15.4 m/s என்ற அளவில் செங்குத்தாக சுழன்று கொண்டிருக்கிறது. மேலும் கடற்பரப்பின் வெப்பநிலை 27-28 °C என்ற அளவில் பதிவாகியுள்ளது.
உலக வானிலை மாதிரிகளின் கணிப்புப்படி வடகிழக்கு திசையில் நகருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடற்பரப்பின் அழுத்தம் 1006 Hpa என்ற அளவில் நிலவுவதால்  அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தென் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.




27 November 2017

வளிமண்டலம் (Atmosphere) ஒரு பார்வை

பூமியின் வளிமண்டலமானது வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இவை புவிஈர்ப்பு விசையினால் நிலைநிறுத்தபடுகின்றன. வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவீதமும், ஆக்ஸிஜன் 21 சதவீதமும், இதர வாயுக்களான ஆர்கான், நியான், ஹீலியம், க்ரிப்டோன், கார்பன் டை ஆக்சைடு, ஓசோன் போன்ற வாயுக்கள் 1 சதவீதமும் கலவையாக கலந்துள்ளன. மேலும் நீராவியும், தூசுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இவையே வானிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைகின்றன.
வளிமண்டலத்தின் உயரம் அதிகரிக்க வாயுவின் அளவானது வேறுபடுகிறது. அவை பூமியின் மேற்பரப்பில் அடர்த்தியாகவும்,உயரம் அதிகரிக்க, அதிகரிக்க அடர்த்தி குறைந்தும் காணப்படுகின்றன.
வளிமண்டலம் அதன் பண்புகளின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அவையாவன

           1.அடியடுக்கு
           2.படையடுக்கு
           3.மையஅடுக்கு
           4.அயனியடுக்கு
           5.வெளியடுக்கு


24 November 2017

காற்று முன்னறிவிப்பு (Wind Forecast) 24-Nov-2017




வடகிழக்கு பருவக்காற்று துவங்கியது முதலே ஏற்ற தாழ்வுகளுடன் குறைந்த வேகத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது, தற்போது வேகத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு தமிழக கடலோர மாவட்டங்களில் நல்ல நிலையை எட்டியுள்ளது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் காற்றின் வேகம் உயர்வதற்கான சூழல் நிலவுகிறது. மேலும் வானிலை மாதிரிகளில் அடுத்த 10 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் காற்று இயல்பாக இருக்கும் (சராசரியாக 7-8 m/s ) என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடல் மற்றும் இந்தியா பெருங்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த பகுதிகளின் காரணமாக ஒருசில நேரங்களில் காற்றின் வேகம் இயல்பிலிருந்து வேறுபட்டு வீச வாய்ப்புள்ளது


The northeast monsoon began with low backward slopes and now has a slight change in speed and has reached good standing in the coastal districts of Tamil Nadu. Thus the atmosphere prevailing wind speed in Thoothukudi, Tirunelveli and Kanyakumari districts. The weather conditions are expected to be the norm in the southern districts for the next 10 days (average 7-8). The wind speed may sometimes diverge from normal because of the low voltages in the Bengal and the Indian Ocean.