வங்க கடலில் இலங்கைக்கு அருகில்
நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறி வடக்கு
நோக்கி நகர்ந்து விட்டது. இதனால் தமிழகத்தில்
வடகிழக்கு காற்றின் வேகம் தடைபடுகிறது. மேலும் வரும் நாட்களில் காற்றின் வேகம் தடுமாறிக்கொண்டே
இருக்கும்.
22-11-2017 மதியம் முதல் கடற்கரை பகுதிகளில் காற்றின்
வேகம் உயர்வதற்கான சூழல் நிலவுகிறது. இது இரண்டாம் காலநிலை காற்று தொடங்குவதற்கான ஒருசில
அறிகுறிகள் போல தென்படுகிறது. அவ்வாறு தொடங்கினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாக இரண்டாம் காலநிலை காற்றானது
நவம்பர் இறுதி வாரத்திற்கும், டிசம்பர் முதல் வாரத்திற்கும் இடையில் தோன்றும் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment