29 March 2018

Global wind -Tri Cellular Model-கோள்காற்று முச்சிறை மாதிரிகள்



முச்சிறை மாதிரிகள் (Tri Cellular Model):
கோள்காற்றை போலார் சிறை, பெர்ரல் சிறை மற்றும் ஹாட்லி சிறை என்று மூன்று சிறை மாதிரிகளாக வகை படுத்தப்படுகின்றன. இந்த மாதிரிகள் கோள்காற்றின் வகைகள், அதன் சுற்றோட்டம், காலங்கள் ஆகியவற்றை தெளிவாக விளக்குகின்றன.
1.போலார் சிறை (Polar Cell):
வடதுருவ பகுதியில் வளியானது உயர் அழுத்த பகுதியிலிருந்து, தாழ்வழுத்த பகுதிக்கு பாய்கிறது. அதாவது பூமியின் மைய பகுதி 0°வ லிருந்து 60°வ இடைப்பட்ட பரப்பில் பாய்கிறது.
காற்றின் திசை கோலாரியோசிஸ் விளைவின் காரணமாக வட துருவ பகுதியிலிருந்து வலப்புறமாக திசை மாறுகிறது. இந்த சிறை துருவ கிழக்கு காற்றை பற்றி விவரிக்கிறது.
2.பெர்ரல் சிறை (Ferral Cell):
 30°வ முதல் 60°வ வரைக்கும் இடைப்பட்ட அட்ச ரேகை பரப்பை இந்த சிறை விளக்குகிறது.
இப்பகுதியில் வளியானது துருவ பகுதியை நோக்கி இழுக்கப்படுகிறது. கோலாரியோசிஸ் விளைவின் காரணமாக காற்றின் திசை தென்மேற்காக மாறுகிறது.
இக்காற்று பெருங்கடலிலுள்ள ஈரப்பத காற்றை நிலப்பரப்பினுள் இழுத்து வருகிறது. வெப்பமண்டல பகுதியிலுள்ள சூடான காற்று குறைந்த அடர்த்தியையே கொண்டுள்ளதால் தாழ்வழுத்த பகுதியை உருவாக்குகிறது. இந்த தாழ்வழுத்த பகுதியே வலுப்பெற்று புயலாக மாறுகிறது. மத்திய அட்ச ரேகை பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தாழ்வழுத்த பகுதிகள்  நிலையில்லமால் ஏற்படுகின்றன இதையே மித வெப்பநிலை கடல்சார் காலநிலை (Cool Temperature Western Maritime Climate - CTWM) என்றழைக்கப்படுகின்றன.
3.ஹாட்லி சிறை (Hardly Cell):
30°வ முதல் 30°தெ அரைக்கோளத்தின் காற்றோட்டத்தை இந்த சிறை விவரிக்கிறது.   கதிரவனின் கதிர்கள் செங்குத்தாக வெப்பமண்டல பகுதி 30°வ-க்கும் 30°தெ-க்கும் மைய பகுதியில் விழுகின்றன. இப்பகுதியை வெளி வெப்பமண்டல கூடும் பகுதி (Inter tropical convergence Zone - ITCZ) என்று அழைக்கப்படுகின்றன.
சூரிய கதிர்கள் நேரடியாக இங்கு விழுவதால் சூடான வளி மேலெழும்புகிறது இதுவே மைய பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தாழ்வழுத்த பகுதி உருவாக காரணமாக அமைகிறது. மேலெழும்பும் காற்று குளிர்ந்து பெரும் மேக திரள்களாக உருவாகி பெரும்மழையை பெய்விக்கிறது. வெப்பமண்டல பகுதியில் பாயும் கிழக்கு காற்று கோலாரியோசிஸ் விளைவின்  காரணமாக திசைமறி வீசுகிறது. அதாவது வடகிழக்கு காற்று வலப்புறமாகவும், தென்மேற்கு காற்று இடப்புறமாகவும் மாறுகிறது.


22 March 2018

Global Wind Pattern -உலக காற்றின் (அ) கோள் காற்றின் அமைப்பு




1.துருவ கிழக்கு காற்று
வறண்ட மற்றும் ஈரப்பதமுள்ள துருவ கிழக்கு காற்று, வட துருவ உயர் அழுத்த பகுதியிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த பகுதிக்கு வீசுகிறது. அதாவது 60° அட்சரேகைக்கு மேற்பட்ட பகுதிகளில் பாய்கிறது. இவை நார்வே, அலாஸ்கா, அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கியது   . முன் துருவ (Polar Front) பகுதி என்பது துருவ கிழக்கு காற்று பகுதிக்கும், மேற்கு காற்று பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

2. மேற்கு காற்று (அ) எதிர் வாணிப காற்று
மேற்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதிக்கு பாயும் காற்றின் பெயர் மேற்கு காற்று என்றழைக்கப்படுகின்றது. இதன் எல்லை கோடு அதாவது அட்சரேகை 30° முதல் 60° க்கு இடைப்பட்ட பகுதியாகும். 30° யை ஒட்டியுள்ள பகுதி அதாவது எதிர் வாணிப காற்று பகுதியையும், வாணிப காற்று பகுதியையும் இணைக்கும் பகுதி குதிரை அட்சரேகை எனப்படும். இப்பகுதியில் மாறுபட்ட காற்றின் வேகமும், சில நேரங்கள் வறண்ட சூறை  காற்றும், உயரழுத்தமும் கொண்ட ஒரு பாலைவன பரப்பாகும். மேற்கு காற்று குளிர்கால அரைக்கோளத்தில் அதிகமாகவும், கோடைகால அரைக்கோளத்தில் குறைவாகவும் வீசுகிறது. வட அரைக்கோளத்தில் அமெரிக்கா புளோரிடா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் இதன் எல்லைகளாக அமைகின்றன. தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, பராகுவே போன்ற பாலைவனங்கள் இதன் எல்லைகளாக அமைகின்றன.

3.வாணிப காற்று (Trade Wind)
வாணிப காற்று என்பது துணை வெப்பமண்டல உயிர் அழுத்தப்பகுதியிலிருந்து தாழ்வழுத்த பகுதிக்கு பாய்கிறது. வட அரைக்கோள பகுதி அதாவது 30° வ  அட்சரேகையிலுருந்து 0° புவி நடுக்கோடு பகுதியை நோக்கி பாய்கிறது இவையே வடகிழக்கு வாணிப காற்று அல்லது வழகிழக்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகிறது. இதேபோல் தென் அரைக்கோள பகுதி அதாவது 30° தெ அட்சரேகையிலுருந்து 0° புவி நடுக்கோடு பகுதியை நோக்கி பாயும் காற்று தென்மேற்கு வாணிப காற்று அல்லது தென்மேற்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகிறது. பொதுவாக துணை வெப்பமண்டல பகுதிகளில் காலநிலை சீராக காணப்படுகிறது.



21 March 2018

Troposphere Wind -அடி வளிமண்டல காற்று



வானிலை கூற்றுகளின்படி அடி வளிமண்டல காற்றை அதன் வேறுபட்ட வேகத்தையும், திசையையும் வைத்து வரையறுக்கப்பகிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இயல்பைவிட அதிகமாக, கணநேரத்தில் வீசும் காற்று, காற்று வீச்சு (Gust) என்றழைக்கப்படுகிறது. இந்த காற்று வீச்சு வானிலையில் அவ்வவ்போது நிகழும் மேக ஓட்டம், மழை பொழிவு, நிலப்பரப்பின் வெப்பநிலை, நிலஅமைப்பு மற்றும் கட்டிடங்கள் போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிகவும் அதிவேகத்தில் குறுகிய நேரம் மட்டுமே வீசி மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் காற்று மாயக்காற்று (Squall) எனவும் அழைக்கப்படுகின்றன.
பூமியின் காற்றோட்டம் மிகவும் முக்கியமான இரு காரணங்களால் ஏற்படுகின்றன. அவை
1.புவி சுழற்சி
2.நில அமைப்பின் வெப்பநிலை வேறுபாடு
உலக காற்றின் அமைப்பு (Global wind Pattern).
புவியின் காற்றின் அமைப்பை வைத்து கீழ்கண்ட ஆறு காற்று வளையங்களாக பிரிக்கலாம். புவி மைய பகுதியிலிருந்து வட அரைக்கோளத்தில் மூன்று பிரிவுகளாகவும், தென் அரைக்கோளத்தில் மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.
அவையாவன.
1.துருவ கிழக்கு காற்று (Polar Easterlies)
2.மேற்கு காற்று (Westerlies)
3.வாணிப காற்று (Trade Wind)